காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்புக்கு 50,000 வெள்ளி மானியம் வழங்கி கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றினார் அமைச்சர் சிவக்குமார்!

புத்ரா ஜெயா, டிச 11-
பல விதமான விளையாட்டு போட்டிகளை
நடத்தி முத்திரை பதித்து வரும் காசிங்
ரேஞ்சர்ஸ் விளையாட்டு கிளப் சொந்த
கட்டடத்தை வாங்கும் முயற்சிக்கு ஆதரவு
வழங்கும் வகையில் மனிதவள அமைச்சர் வ.
சிவக்குமார் 50,000 மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் 10 ஆம் ஆண்டு
விழா மற்றும் நிதி திரட்டும் விழாவுக்கு தலைமை ஏற்ற அமைச்சர் சிவக்குமார் 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இப்போது 50,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் தலைவர் வேல்குமார்
தலைமையில் அதன் பொறுப்பாளர்கள்
சொந்த கட்டடத்தை வாங்கும் முயற்சியில்
தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

மலையேறும் போட்டி மற்றும் பேட்மிண்டன்
போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வரும் காசிங்
ரேஞ்சர்ஸ் கிளப்பில் இப்போது 100
உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

உடல் நலத்தை பேணும் வகையில்
வாரத்திற்கு மூன்று முறை காசிங் ரேஞ்சர்ஸ்
கிளப் உறுப்பினர்கள் மலையேறும்
பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு
மிகவும் நல்லது. மேலும் காசிங்
ரேஞ்சர்ஸ் கிளப் சொந்த கட்டடத்தை
வாங்கும் முயற்சிக்கு ஆதரவு வழங்குவேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles