
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் டியோ டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபிந்த் சிங் டியோ இம்முறை தொகுதி மாறுகிறார் என்று கூறப்படுகிறது.
டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்று வந்த டோனி சுவா இம்முறை போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது

