அமுதம் வகுப்பில் 100 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

ஈப்போ, டிச.26: ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தினர் 15 வது ஆண்டாக அமுதம் என்ற இளைஞர்களுக்கான சமய பண்பாட்டு வகுப்பினை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை 100 மாணவர்களுடன், 30 தன்னார்வ தொண்டர்களுக்கும் இணைந்து நடத்தப்படுவதாக மலேசிய முருகன் பக்தி பேரவையில் தலைவரும், ஈப்போ அருணகிரிநாதர் மன்ற தலைவருமாகிய மகப்பேறு மருத்துவர் டாக்டர் வ. ஜெயபாலன் கூறினார்.

நேற்று காலையில் இந்த அமுதம் வகுப்பினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் எம்.சி.ஐ.எஸ். காப்புறுதி நிர்வாகி ஆ.கோவிந்தராஜு. மாணவர்கள் கல்வியில் மட்டும் சிறந்து விளங்காமல், நன்னெறி பண்பாளர்களாக திகழ வேண்டும். அதற்கு அவர்கள் இதுபோன்ற ஆன்மீக பண்புகூறுகள் நிகழ்வில் கலந்துக்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அமுதம் வகுப்புகள் தமிழ்நாட்டு பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் தலைமையில் நடைபெறும். அதுபோல இவ்வாண்டும் அவரின் தலைமையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். இந்த மாணவர்கள் தலைமையில் இவ்வாண்டு அருணகிரிநாதர் விழா இம்மாத் 31 ரிலும், ஜனவரி 1 லும் வழிநடத்தப்படும் என்று டாக்டர் வ.ஜெயபாலன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles