
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஆகியோரை எம்ஏசிசி விசாரணை செய்வதை காண மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த விசாரணையை கடந்து வந்திருக்கிறார்.
ஆகவே துன் மகாதீர் முகமட் – துன் டைம் ஆகியோரை எம்ஏசிசி விசாரணை செய்வதை காண மலேசியர்கள் உண்மையிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.
பண்டோரா பேப்பர்ஸ் வைரலான பின்னர் துன் டைம் மீதான செல்வம் கசிந்துள்ளது என்று அவர் சொன்னார்.

