
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி திட்டத்தில் எனக்கு தொடர்பு இல்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த சதி திட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதில் நான் பங்கேற்கவில்லை.
இந்த சதி திட்டத்தில் நானும் ஈடுபட்டதாக கூறப்படும் ஆருடங்கள் அவதூறானவை என்றார் அவர்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க துபாயில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

