பேரா இந்தியர் வர்த்தக சபையின் ஏற்பாட்டில் SME கடனுதவித் திட்டம்

பேரா இந்தியர் வர்த்தக சபையின்(MIDF) ஏற்பாட்டில்   SME (எஸ். எம். இ) கடனுதவித் திட்டங்கள் பற்றிய இலவச விளக்கக் கூட்டம் பேரா இந்தியர் வர்த்தக சபையின் மண்டபத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக  நடைபெற்றது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது நிறுவனத்தின் எஸ்.எஸ் எம். பதிவு வைத்திருக்க வேண்டும். அத்துடன், வங்கிக் கணக்கில்  வருடாந்திர விற்பனை தொகையாக RM125,000 முதல் RM300,000 வரை
இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் குறைந்தபட்சம் 60% மலேசியருக்குச் சொந்தமானதாக இருப்பதோடு குறைந்தது 2 ஆண்டுகள் செயல்பாட்டில்  இருக்க வேண்டும்.

SME கார்ப்பரேஷனிடமிருந்து மைக்ரோ SME சான்றிதழுடன் மைக்ரோ எண்டர்பிரைஸ் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய அடிப்படைத் தகுதி கொண்டவர்கள் நிதித் தொகையாக ரிங்கிட் 50,000 முதல் 5 மில்லியன் ரிங்கிட் வரை கடனுதவிக்கு மனுச் செய்ய முடியும் என்று பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவர் திரு பா.ரவிசங்கர் கூறினார்.

இதற்கு 4 மாதாந்திர ஓய்வுக்கான நிதி விகிதம் 4 சதவீத வட்டி மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆகையால், உற்பத்தி தொடர்புடைய சேவைகள் மற்றும் சேவைத் துறைகளில் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு கடனுதவி பெற்று வியாபாரத்தை மேலும் மேம்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கடனுதவி திட்டத்தை MIDFவின்   தலைமை வணிக ஆலோசனை பிரிவு அதிகாரி முகமது கிருல் அனுவார் வழி நடத்தினார். மேலும் இத்திட்டத்திற்கான இலவச ஆலோசனைகள் MIDF வின்   அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

கூடுதல் தகவலுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய எண்: 014-924 2558.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles