
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோலாலம்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இருந்து புறப்படும் அருள்மிகு முருகப் பெருமானின் இரதம் நள்ளிரவில் ம.இ.கா தலைமையகக் கட்டிடத்தை வந்தடையும் வேளையில் பக்தர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிற்றுண்டிகளும் பானங்களும் வழங்கப்படும் என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ தெரிவித்தார்.
இந்த தைப்பூசத் திருவிழாவை நாம் அனைவரும் பக்தி நெறியோடு கொண்டாட வேண்டும் என்றும் டத்தோஶ்ரீ சரவணன் சொன்னார்.

