
பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா மிகப்விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் பொங்கல் சிறப்பு படைப்புகளாக கிராமிய நடனங்கள், மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டிகள் அனைத்தும் இந்த பொங்கல் விழாவில் அங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியர்கள் மாணவர்கள் சேர்ந்து பொங்கல் வைத்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி மதிப்புமிகு தியாகராஜ் சங்கரநாராயணன் கலந்து கொண்டார்.
இந்த பொங்கல் விழாவை சிறப்புடன் செய்து முடித்திட முழு ஆதரவாக இருந்த பள்ளியின் அறங்காவலரான டான்ஶ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா அவருக்கு விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவரும் பள்ளியின் மாணவர் நலத் துணையாசிரியருமான விக்டர் ஆசிர்வாதம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பள்ளியின் பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.

