விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அதிகம் பங்கேற்க வேண்டும். :- ஹர்மொனி தேவி வேண்டுகோள்!

அன்மையில் பவர் ஷட்டலர்ஸ் பேட்மிண்டன் குழுவின் ஏற்பாட்டில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு பூப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

கிள்ளான் ப்ரேண்ட்லி பேட்மிண்டன் அகாடெமி பூப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த மகளிர் இரட்டையிர் பிரிவு பூப்பந்து போட்டியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முதன் முறையாக ஏற்பாடு செய்த இந்த போட்டி நிகழ்ச்சியில் 18 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த போட்டியில் வீட்டுப் பெண்களும் வேலைக்கு செல்லும் பெண்களும் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாக பவர் ஷட்டலர்ஸ் பேட்மிண்டன் குழுவின் தலைவியான ஹர்மொனி தேவி கூறினார்.

மேலும் எதிர்காலங்களில் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக பூப்பந்து போட்டிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தடுத்து செய்யவிருக்கும் போட்டிகளில் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு பெண்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காரணம் அவர்களின் ஆரோகியத்தையும் மேம்படுத்தும், தன்னம்பிக்கையும் மேலோங்கச்செய்யும் எனவும் ஹர்மொனி தேவி கூறினார்.

போட்டியில் மைசூரி குழுமத்தின் தோற்றுனர் டத்தோஶ்ரீ சண்முகத்தின் துணைவியார் டத்தின்ஶ்ரீ மைசூரி அவரும் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles