காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் உட்பட 23 பேர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

காஜாங், ஜன 19-
2024-2025 தவணைக்கான காஜாங் நகராண்மைக் கழக (எம்.பி.கே.ஜே.)
புதிய உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் உள்பட 23 பேர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

எம்.பி.கே.ஜே. தலைமையகத்தில் 23 உறுப்பினர்களும் காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் துவான் நஸ்லி முகமட் தாயிப் முன்னலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் பி.கே.ஆர். உலு லங்காட்டைச் சேர்ந்த சந்திரன் ராமசாமி, ராமசந்திரன் அர்ச்சுனன், பி.கே.ஆர். பாங்கி தொகுதித் தலைவர் பாலமுரளி கோவிந்தராஜு, ஜ.செ.க.வைச் சேர்ந்த தியாகராஜா ராஜகோபால், சங்கீதா சந்திரமோகன் ஆகியோர் அடங்குவர். இவர்கள் ஏற்கனவே கடந்தாண்டிலும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய துவான் நஸ்லி, இதுநாள் வரை கடந்த தவணியிலிருந்து பணியாற்றி வரும் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
பழைய நகராண்மைக் கழக உறுப்பினர்களின் அனுபவங்களுடன் புதிய நகராண்மைக் கழக இணையும் போது இவ்வாண்டு மற்றும் அடுத்தாண்டில் எம்.பி.கே.ஜே. மிகவும் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன் துவான் நஸ்லி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles