கல்லுமலை வெள்ளி இரத ஊர்வலத்தில் துணை அமைச்சர் கலந்து சிறப்பித்தார்!

ஈப்போ,ஜன27:
தைப்பூச திருநாளை முன்னிட்டு ஈப்போ கல்லுமலை ஆலயத்திலிருந்து சகல அலங்காரத்துடன் பக்கதர்களுக்கு அருளாட்சி வழங்க புறப்பட்ட முருகப் பெருமானை வழங்கி அருளாட்சி பெற்றார் சட்டத்துறை துணை அமைச்சர் மாண்புமிகு மு.குலசேகரன்.

தன்குடும்பத்தோடு இரத ஊர்வலத்தில் கலந்து கொண்ட துணை அமைச்சர் இரத ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்ததோடு ஆலய நிர்வாகத்தோடும் பொது மக்களோடும் சந்தித்து பேசினார்.

முன்னதாக தைப்பூச திருநாள் அன்றும் அவர் ஆலயத்திற்கு வருகை புரிந்து முருகனை வணங்கினார்.

மேலும்,ஈப்போ கல்லுமலை ஆலயத்தின் செயல்பாடுகள் அதன் வரலாறு குறித்தும் பேசிய அவர் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வருகை பெரும் நிறைவாக இருப்பதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி,ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நெறியோடு தைப்பூச திருநாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருபதாகவும் நமது பாரம்பரியமும் சமயமும் தொடர்ந்து இம்மண்ணில் தனித்துவமாய் திகழ நமது ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நமது சமயமும் பாரம்பரியமும் காக்கப்படுவது போல் நம் இனத்தின் இளைஞர்களின் நம்பிக்கையான எதிர்காலமும் மெய்பிக்கப்பட வேண்டும் என்று நினைவுறுத்திய அவர் ஆலயங்கள் சமூக செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

குறிப்பாக,இளைஞர்கள்,மாணவர்களின் எதிர்காலத்தை சரியான இலக்கை நோக்கி பயணிக்க வைப்பதில் ஆலயங்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் கூறிய அவர் சமூக செயல்பாட்டில் கவனம் செலுத்தும் ஆலயங்களுக்கு ஆதரவு அளிக்கவும் வழிகாட்டவும் தாம் தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.

மிகவும் சிறப்பாக தொடங்கிய இரத ஊர்வலத்தில் ஆலய நிர்வாகம் துணை அமைச்சருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles