சீனப் புத்தாண்டை முன்னிட்டு 200 பேருக்கு அன்பளிப்பு கூடைகள் வழங்கினார் கவுன்சிலர் எலிஸ் சூ!

ஓரிரு வாரங்களில் நாட்டில் சீன மக்கள் சீனப் புத்தாண்டை கொண்டாட இருக்கின்றனர். அனைத்து சீன மக்களும் இந்த பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். 

அதேபோல பி40 பிரிவை சேர்ந்த சீன மக்களும் இந்த பெருநாளை தடையின்றி கொண்டாடிட வேண்டும் என நோக்கத்தில் செலயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சூ 200 பேருக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு கூடைகள் வழங்கினார்.

நேற்று ரவாங் நியூ கிரீன் பார்க் கூடைப்பந்து மைதானத்தில் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களான 200 பேருக்கு இந்த அன்பளிப்பு கூடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநிலம் பெருநாள் காலங்களில் பொதுமக்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.  அது போலவே இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு ரவாங் வட்டாரத்தில் 400 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ரவாங் வட்டாரத்தில் அதிகமான மக்கள் தொகையின் காரணமாக பற்றுச்சீட்டுகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு இந்த அன்பளிப்பு கூடைகள் பெரும் உதவியாக அமைகின்றது என வில்லியம் லியோங் கூறினார்.

மேலும் அனைவரின் நலன் கருதி   அன்பளிப்புக் கூடைகளை வழங்கிய கவுன்சிலர் எலிஸ் சூ அவருக்கு வில்லியம் லியோங் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். கவுன்சிலராக பொறுப்பேற்று பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து லட்சுமி ஆதரவற்றோர் இல்லத்திற்கும் அனைவரும் சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு 20 பேருக்கு அன்பளிப்பு கூடைகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த அன்பளிப்பு கூடைகள் வாழங்குவதற்கு தமக்கு பெரும் ஆதரவாக இருந்த FFM, KLK, GETHA, SEPANG G GOLDCOST, JULIE’S BISCUITS BHD ஆகிய நிறுவனங்ளுக்கு கவுன்சிலர் எலிஸ் சூ நன்றியை  தெரிவித்துக் கொண்டார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles