
கோலாலம்பூர், ஜன. 30- தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்.) வழி கடந்தாண்டு 260 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.
வறுமையை ஒழிப்பது மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்ததாக அவர் சொன்னார்.
மலேசியாவை பொறுத்த வரை தொழில்முனைவோருக்குப் பல வாய்ப்புகள் உள்ளன. அமானா இக்தியாரின் இந்த சாதனையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அமானா இக்தியார் திட்டங்களுக்குப் பிரதமர் ஆதரவு தருவார் எனவும் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்

