
கோலாலம்பூர் ஜன 30-
வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி பத்துமலை தைப்பூச உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் பொருளாளர் டத்தோ பி. அழகன் தெரிவித்தார்.
பிப்ரவரி 3 ஆம் தேதி காலை பத்து மணிக்கு மேல் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே பத்துமலை தைப்பூசத்தில் மிக சிறப்பாக சேவையாற்றிய தொண்டர்கள், பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினர், ரேலா படையினர், முதலுதவி சேவைகள் வழங்கிய தொண்டர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

