டத்தோஸ்ரீ நஜிப் விடுதலைக்குதொடர்ந்து போராடுவோம்!டத்தோஸ்ரீ தனேந்திரன் அறிவிப்பு

கோலாலம்பூர் பிப் 5-
காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விடுதலைக்கு தொடர்ந்து போராடுவோம் என்று மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

இன்று காலையில் நீதிமன்றம் வந்த டத்தோஸ்ரீ நஜிப்பை சந்திக்க நேர்ந்தது.

அவர் வழக்கை எதிர் நோக்கிய முதல் இன்று வரை மக்கள் சக்தி கட்சி அவருக்காக பக்கப்பலமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அவர் நீதிமன்றம் வரும் போதெல்லாம் நான் அங்கு இருக்கிறேன்.

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு முழுமையான விடுதலை கிடைக்கவில்லை.

மன்னிப்பு வாரியம் அவரின் தண்டனையை பாதியாக குறைந்தாலும் அவரின் முழு விடுதலைக்கு மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து போராடுவோம் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles