
விரைவில் கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு பந்திங் தொகுதியிலுள்ள 400 சீனக் குடும்பங்களுக்குப் பெருநாள் கால இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
பந்திங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான இந்த பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் எக்கோன்சேவ் பேராங்காடியில் நடைபெற்றது.
பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் தலா 200 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகள் தகுதி உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகப் பாப்பராய்டு கூறினார்.

