
கிள்ளான், பிப்.6-
சிலாங்கூர் கிள்ளானில் ஒரு மிளகாய் பண்ணையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும், அது எவ்வாறு உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதை பார்க்க சென்றதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இது Program Pemangkin Digital Malaysia (PEMANGKIN) ஒரு பகுதியாகும்.
இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய வணிகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியானது சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் MDEC ஆல் இயக்கப்படுகிறது.
வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சால் (KPKM) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட MDEC, விவசாயத் துறைக்கான தேசிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாயிலாக நவம்பர் 2022 முதல் 500 க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கியுள்ளது.
இதில் 28,000 AgTech பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு ஒரு அறுவடைக்கு 2,000 கிலோவுக்கு மேல் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு RM2,000க்கு மேல் கூடுதல் மாத வருமானம் மற்றும் ஒரு ஏக்கருக்கு அறுவடைக்கு RM3,000 க்கு மேல் இயக்கச் செலவு குறைப்பு இதில் அடங்கும்.
விவசாயத் தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
Agrobank நிதியுதவி ஆதரவுடன் இணைந்து, நுண் நிதியளிப்பு விண்ணப்பங்களை அணுகுவதற்கும் செயலாக்குவதற்கும் உதவுவதுடன், விவசாயத் துறையின் வாய்ப்புகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

