
கிள்ளான், பிப் 16-
எனது அலுவலகத்தில் உள்ளூர் மக்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதி ராவ் தெரிவித்தார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு கிராம தலைவர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிள்ளானில் அடிமட்ட மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்காக, முடிந்தவரை பல கிள்ளான் குடியிருப்பாளர்களைச் சந்திக்க முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
மேலும் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுப்பேன் என்றார் அவர்.

