
அம்பாங், பிப் 16-
அம்பாங், மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தில் கடந்த நான்கு நாள்களுக்கு இந்து சமயப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் நான்கு நாள்கள் திருமடத்தில் தங்கி பயிற்சியை மேற்கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டது. இந்து சமயக் கல்வி, சனாதன தர்மம், இல்ல வழிபாடு, ஆலய வழிபாடு, ஷண்மத கொள்கைள் போன்றவை மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. ஒரு சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கு இளைய தலைமுறையினரிடையே சமய அறிவைப் புகட்டுவது மிக மிக அவசியம். மாணவர்களுக்கு மனமகிழ் நடவடிக்கை வழி சமயக் கல்வி போதிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு அறுச்சுவை சைவ உணவுகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது என்று திருமடத்தின் துணைத் தலைவர் டாக்டர். இரா. பிரேமகண்னன் தெரிவித்தார்.

