
கோலாலம்பூர் பிப் 21-
இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஒரு வரலாற்று தீர்ப்பாகும் என இந்த வழக்கில் வாதாடிவர்களில் ஒருவரான வழக்கறிஞர் எம்.ஜே. கணேசன் பெருமிதம் அடைந்தார்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் ஆகியவை தமிழ், சீனப்பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று ஆணி அடித்ததை போல் அதிரடி தீர்ப்பு வழங்கி இருப்பதால் இனி தாய்மொழிப் பள்ளிகள் குறித்து எவரும் இனி கேள்வி எழுப்ப முடியாது என்று மலேசிய தமிழர் சங்கத்தின் தலைவருமான அவர் சொன்னார்.
தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செய்த மேல்முறையீட்டையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.
பெடரல் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பானது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தாய்மொழி பள்ளிகளை காப்பாற்ற போராடிய நான் உட்பட அனைத்து வழக்கறிஞர்களையும் மலேசிய தமிழர் சங்கம் வெகுவாக பாராட்டுகிறது என்று அவர் சொன்னார்.

