2023 ஆம் ஆண்டில்1.8 பில்லியன் லாபத்தை ஈட்டிய சொக்சோ நிறுவனத்தை பாராட்டினார் சிவகுமார்!

கோலாலம்பூர் பிப் 21-
சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (Socso) நிதிச் செயல்பாடு கடந்த ஆண்டு சிறப்பாக இருந்ததோடு RM1.8 பில்லியன் லாபம் ஈட்டியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று முன்னாள் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 50% அல்லது 1.5 மடங்கு அதிகமாகும்.

மேலும் 1971 இல் சொக்சோ நிறுவப்பட்டதிலிருந்து இதுவே நிறுவனத்தின் மிகச் சிறந்த நிதிச் செயல்பாடாகும்..

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) கடந்த ஆண்டு காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் RM5.73 பில் வரை பலன் செலுத்தியுள்ளது .

2022 ஆம் ஆண்டில் சொக்சோ RM5.1 பில்லியனை இதேபோன்ற கொடுப்பனவுகளைச் செய்ததாகவும், 1971 ஆம் ஆண்டில் Socso நிறுவப்பட்டதிலிருந்து 2023 ஆம் ஆண்டில் Socsoவின் ஒட்டுமொத்த நிதிச் செயல்திறன் சிறப்பாக இருந்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன்.

இது 2022 இல் இருந்த ரிம5.1 பில்லியனை விட அதிகமாகும்.

“2023 நிதிநிலை அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பு (Socso) நிறுவனம் அனைத்து அம்சங்களிலும், 14% நேர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது.

மொத்த முதலீட்டு வருமானம் 27% ஆக அதிகரித்துள்ளது, மேலும் முதலீட்டின் மீதான வருமானம் (ROI) 6% ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் மனிதவள அமைச்சராக நான் இருந்த காலத்தில் சொக்சோ நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியள்ளதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

சொக்சோ நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட அனைத்து பணியாளர்களையும் பாராட்டுகிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles