
கோலாலம்பூர் பிப் 21-
மலேசிய திருநாட்டில் வாழும் தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்படி ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
இந்நாட்டில் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும்.
தமிழ்ப் பள்ளியே தமது தேர்வு எனபதற்கு ஏற்ப நாம் தமது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவோம்.
தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்றும் அவை தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா ஃபெடரல் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
ஆகவே இந்த நாட்டில் இனியும் தாய்மொழி பள்ளிகளை பற்றி கேள்விகள் எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்பதால் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஒன்றாக இணைந்து பாடுபடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

