சிவநேசன் தலைமையில் ஒற்றுமை பொங்கல்!!

சுங்கை,பிப்21: சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிகுழு உறுப்பினருமான அ.சிவநேசன் தலைமையில் பத்தாங் பாடாங் – முவாலிம் மாவட்ட நிலையிலான ஒற்றுமை பொங்கல் விழா சுங்கையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வருகின்ற 24.02.2024 (சனிக்கிழ்மை) காலை மணி 8.00 தொடங்கி மதியம் 3.00 மணி வரை சுங்கை ஸ்ரீ சுங்கை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு மாவட்டத்தை சார்ந்த பொது இயக்கங்கள்,ஆலய நிர்வாகங்கள்,தமிழ்ப்பள்ளி பிரதிநிதிகளோடு மூவினத்தை சார்ந்தவர்களும் திரளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும்,பொங்கல் வைத்தல்,வர்ணம் தீட்டுதல்,தோரணம் பின்னுதல்,கோலம் வரைதல் போன்ற போட்டிகளும் இதில் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த நிலப்பட்டா சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டு நில உறுதி கடிதம் வழங்கும் அங்கமும் நடைபெறவுள்ளது.

எனவே,சுங்கை,பீடோர் வட்டாரத்தை சார்ந்த பொது மக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles