
ஷா ஆலம் பிப் 29
மனிதவள அமைச்சு, சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் நாளை மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஷா ஆலம் IDCC மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெறுகிறது.
100 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று 20,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
வேலை தேடுவோர் இந்த கண்காட்சியில் தங்களுக்குரிய வேலைகளை தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

