
தைப்பிங்,பிப்29: நாடறிந்த எழுத்தாளரும் நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான தைப்பிங் நிலாவண்ணனின் உயிர் வாசனை சிறுகதைத் தொகுப்பு தைப்பிங் மண்ணில் வெளியீடு காணவிருக்கிறது.
சிறந்த பல படைப்புகளை மலேசியத் தமிழ் எழுத்துலகிற்கு வழங்கியுள்ள நிலாவண்ணன் அவரது படைப்பிற்காக பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில்,தனக்கான தனித்துவ வாசகர்களை கொண்டிருக்குக் நிலாவண்ணனின் உயிர் வாசனை நூல் வெளியீடு வருகின்ற 02.03.2024 சனிக்கிழமை வெளியீடு காணவுள்ளது. ம இ காவின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி.முருகையா அவர்கள் சிறப்புரை வழங்கி நூலை வெளியீடு செய்யும் இந்நிகழ்ச்சி பிற்பகல் 3.30க்கு தைப்பிங் செயிண்ட் திரேசா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தைப்பிங் அதன் சுற்றுவட்டாரம் மட்டுமின்றி பினாங்கு,கெடா,பேரா மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் இந்நூல் வெளியீடு நிகழ்ச்சியில் வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படும் வேளையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மணிக்கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் தலைமையுரை ஆற்றுவார்.
சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் வெளியீடுக்கு அனைவரின் வருகையும் பெருமிதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.மேலும்,இந்நூல் வெளியீடு தொடர்பிலான மேல்விபரங்களுக்கு 0 12-555 4279 என்னும் எண்ணில் எழுத்தாளர் நிலாவண்ணனை தொடர்புக் கொள்ளவும்.

