Socso மறுவாழ்வு மையத்தில் 70% தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்

கோலாலம்பூர், பிப். 29-
2019 முதல் கடந்த ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சமூக பாதுகாப்பு அமைப்பின் (Socso) மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற 10,695 நபர்களில் 70 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பி உள்ளனர் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம் தெரிவித்தார்.

சிகிச்சை பெற வந்தவர்களில் 494 பேர் சபா மற்றும் சரவாக்கை சேர்ந்தவர்கள்.

“Socso’s Rehabilitation centreல் சிகிச்சை பெற தகுதியுடையவர்கள், Socso பங்களிப்பாளர்கள் (90 சதவீதம்) மற்றும் Socso பங்களிப்பாளர்கள் அல்லாதவர்கள் (10 சதவீதம்) என இரண்டு பிரிவுகளாக உள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Socso மறுவாழ்வு மையத்தில் கலந்து கொண்டு பணிக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு சிகிச்சை பெறத் தகுதி பெறுவதற்கான அளவுகோல்கள் குறித்து Datuk Seri Richard Riot (GPS-Serian) கேள்விக்கு அவர் பதிலளித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles