இனிப்பு நீரால் இடது காலை இழந்த மீனாம்பிகைக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு

கோலாலம்பூர் பிப் 29-
இனிப்பு நீரால் முட்டி பகுதிக்கு கீழ் தனது இடது காலை இழந்த மீனாம்பிகை ரத்தினம் (வயது 45) என்ற மாதுவுக்கு கோலாலம்பூர் தாமான் டேசா பகாவதி அம்மன் இல்லத்தின் சார்பில் இன்று சக்கர நாற்காலி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இனிப்பு நீர் நோயால்
2022 ஆம் ஆண்டில் இவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது. கோத்தா டமான்சாராவைச் சேர்ந்த இவருக்கு இன்று பகாவதி அம்மன் இல்லத்தின் மூலம் இந்த சக்கர நாற்காலி கிடைத்தது.

பகாவதி அம்மன் இல்லத்தின் பராமரிப்பாளர் திருமதி மகேஸ்வரி நேரடியாக இவரிடம் சக்கர நாற்காலியை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க நேரத்தில் தமக்கு உதவி புரிந்த திருமதி மகேஸ்வரிக்கு மீனாம்பிகை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles