
நீலாய் மார்ச் 2-
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலின் போது நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்தின் அபிலாஷையின் வாக்குறுதிகளில் 2024ஆம் ஆண்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
அந்த வகையில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் உள்ள 700 முதியோர்களுக்கு தலா 200 வெள்ளி உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார் தெரிவித்தார்.
மந்தின் மற்றும் நீலாய் வட்டாரத்தைச் சேர்ந்த இந்த முதியோர்கள் தங்களுக்கு தலா 200 வெள்ளி உதவியாக கிடைத்துள்ளது எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

