அமைச்சருடன் டிரா மலேசியாவின் சந்திப்பு கூட்டம் வெறும் சந்திப்போடு முடிந்து விடகூடாது!

இந்தியர்கள் எதிர்நோக்கி இருக்கும் குடியுரிமை பிரச்சினை குறித்து அமைச்சர்களுக்கு டிரா மலேசிய விளக்கம் கூட்டம் நடத்தியது பயன்யுள்ளதாக அமைய வேண்டு்ம் என திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைப் பெற்ற சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ,சட்டத் துறை துணை அமைச்சர் எம் குலசேகரன் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோருடனான சந்திப்பு வெறும் சந்திப்போடு முடிவடைந்து விடக்கூடாது என அவர் கேட்டு கொண்டார்.

இதற்கு முன் இம்மாதிரியான பல சந்திப்புகள் நடந்தும் எந்த பலனும் கிடைத்தாக தெரியவில்லை என கூறிபிட்ட திரு சந்திர சேகரன் இந்த முறையாவது இந்தியர்களின் அடையாள ஆவணம் விவகாரத்துக்கு ஒரு நல்ல தீர்வு காண பட வேண்டும் என அனைத்து தரப்பையும் கேட்டுக் கொண்டார்.

இந்திய மாணவர்களுக்கு குடியுரிமை இல்லாததால் அவர்களால் தொடர்ந்து கல்வி பயில பல பிரச்சனைகளை எதிர் நோக்கி வருவதை நாம் காண்கிறோம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles