
ஷா ஆலம், மார்ச் 2-
சமூக பாதுகாப்பு அமைப்பு (PERKSO) மற்றும் மனிதவள அமைச்சு ஆகியவை திறமையான பணியாளர்களை உருவாக்க புதிய திறன் மேம்பாட்டு பயிற்சியை தயாரிக்க ஒரு மாத அவகாசம் வழங்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
திறன்களை மேம்படுத்துவது நாட்டை மிகவும் நுட்பமான வேலை சந்தையில் போட்டியிட அனுமதிக்கிறது. குறிப்பாக தொழில்துறைகளில் அதிகமான திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவை என்றார் அவர்.
மனிதவள அமைச்சின் MADANI MyFutureJobs OKU மற்றும் TVET மற்றும் வேலை வாய்ப்பு கண்காட்சியை தொடக்கி வைத்தபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.
ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 20,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
நேற்று நடந்த நிகழ்வில் Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari; Menteri Sumber Manusia, Steven Sim Chee Keong; Pengerusi Lembaga PERKESO, Dato’ Sri Subahan Kamal dan Ketua Pegawai Eksekutif Kumpulan PERKESO, Dato’ Sri Dr. Mohammed Azman ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
.

