

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-
பெட்டாலிங் ஜெயா மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவதிரு பாலயோகி சுவாமிகளின் ஆசியோடு இந்து சமய கருத்தரங்கமும் தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக வழங்கும் பெருவிழா இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
உலக வரலாற்று பதிப்பக தமிழில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் இன்று 36தமிழ் பள்ளிகளுக்கும் 16 கோவில்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 4,200 பக்கத்தில் 12 பிரதிநிதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று திருப்பிடத்தின் செயலாளர் கண்ணா தெரிவித்தார்.
தவத்திரு பாலயோகி சுவாமிகள் மேற்கொண்ட அயராத முயற்சியின் பலனாக இந்த கலைக் களஞ்சிய நூல்கள் வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த கலைக் களஞ்சிய நூல்கள் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு சிறப்பு வருகை புரிந்து இந்து கலைக்களஞ்சிய நூல்களை தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்களிடம் எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

