
கோலாலம்பூர் மார்ச் 3-
ம இகா தேசிய விளையாட்டு பிரிவு ஏற்பாட்டில் பிரசிடெண்ட் கிண்ணக் கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது என்று விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ தெரிவித்தார்.
துன் சாமிவேலு கிண்ணக் கால்பந்து போட்டியை போல் பிரசிடெண்ட் கிண்ணக் கால்பந்து போட்டி அமைந்திருக்கும்.
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய இளைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
நாட்டில் இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் வகையில் இந்த போட்டி விமரிசையாக நடத்தப்படும் என்று
ம இகா இளைஞர் அணி துணை தலைவருமான அண்ட்ரூ தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கால்பந்து போட்டியில் இந்தியர்கள் புகழ் பெற்று விளங்கினர்.
அந்த வசந்த காலம் மீண்டும் மலர பிரசிடெண்ட் கிண்ணக் கால்பந்து போட்டி இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டும் என்று அவர் சொன்னார்.
அண்ட்ரூ தலைமையில் இன்று நடைபெற்ற மஇகா தேசிய விளையாட்டு பிரிவு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இராஜசேகரன், தகவல் பிரிவு தலைவர் தீனாளன், நிர்வாக செயலாளர் குணசீலன், மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் உட்பட அனைத்து மாநில விளையாட்டு பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

