
கோத்தா டமன்சாரா மார்ச்.3-
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் 2024 ஆண்டுக்கு 6 கோடியே 50 லட்சம் வெ TVள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று மடாணி அரசின் சிலாங்கூர் மாநில அளவிலான தெக்கூன் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து போது துணை அமைச்சர் டத்தோ ஆர் இராமணன் தெரிவித்தார்.
இந்த 6 கோடியே 50 லட்சம் வெள்ளி 4000 தொழில் முனைவோர்களுக்கு கொடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் 7.35 மில்லியன் ரிங்கிட் சிலாங்கூர் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சுங்கை பூலோ கோத்த டமன்சாரா (STRAND Mall ) ஸ்டிரன் பேரங்காடியில் மடானி தெக்கூன் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது தெரிவித்தார்.
சிலாங்கூர் உள்ள தொழில் முனைவோர்கள் சொந்த தொழிலில் ஈடுபட முன்பணமாக தெக்கூன் கடன் உதவி மடாணி அரசால் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தெக்கூன் கடனுதவி, எஸ்.எம்.வி கடன் உதவி போன்ற கடன்
உதவிகளுக்கான விளக்கம் கொடுக்கப்படுகின்றன.
அதே வேளையில் சேமநிதி வாரியம், சொக்சோ குறித்தும் பொது மக்களுக்கு விளக்கம் கொடுக்க முகப்பு சேவைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

