

காப்பார், மார்ச் 3 +
மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப்
பேரவையின் 21ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த 29.2.2024:இல் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாண்புமிகு உஸ்தாஜா புவான் ஹாஜா மரியம் பிந்தி அப்துல் ரஷித், (மேரு சட்டமன்ற உறுப்பினர்) நிகழ்ச்சியை திறந்து வைத்து பேசினார்.
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் செயலாளர் தினகரன் மகாலிங்கம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் அதிகாரியாக நடுநிலை வகித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் விவேக ரத்னா திருமிகு அருள்நேசன் ஜெயபாலன், மீண்டும் வட்டாரப் பேரவையின் தலைவராகவும், தொண்டர்மணி மோகன கிருஷ்ணன் துணைத் தலைவராகவும், சீமான் பெருமாள், வட்டாரச் செயலாளராகவும், உமாவதி மனோகரன், துணைச் செயலாளராகவும், பொருளாளராக மணியம் மாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையின் 21 ம் ஆண்டுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் முறையே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தற்போது வட்டாரப்பேரவைகள் ஆண்டு தோறும் கூட்டத்தை நடத்தி நிர்வாகத்தினரை தேர்வு செய்கின்றனர்.
நிர்வாகத் தேர்வை ஒவ்வொரு வருடமும் செய்யாமல் 3 ஆண்டுகளுக்கு 1 முறை நடத்த ஆவன செய்ய வேண்டும்.
ஏனெனில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் இல்லாமல் வெறும் திட்டங்களாகவே முடங்கிக்கிடக்கிறது.மற்றபடி ஆண்டுக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும்.
மலேசிய இந்து சங்கம் தனது நடவடிக்கைகளில் ( எல்லா விதமான கடிதப்போக்கு வரத்துகள்
கூட்டங்கள் , பதாகைகள் , அறிக்கைகள் , சங்க நிகழ்ச்சிகள் ) இன்னும் ஏனைய விதமான வகைகளில் திருவள்ளுவராண்டு மாதம் திகதியினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அமல் படுத்த வேண்டும்.
இதன் வழி நமது இளம் தலை முறையினர் நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
இத்தீர்மானங்கள் ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் சம்மதத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

