சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் 597 மூத்த குடிமக்களுக்கு தலா 200 வெள்ளி உதவிநிதியை வழங்கினார் ஓய்.பி குணா

சிரம்பான்,மார்ச் 3-
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலின் போது நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்தின் அபிலாஷையின் வாக்குறுதிகளில் 2024ஆம் ஆண்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் உள்ள 597 முதியோர்களுக்கு தலா 200 வெள்ளி உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது .

சிரம்பான் ஜெயா சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் தலைமையில் மூத்த குடிமக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

சிரம்பான் ஜெயா வட்டாரத்தில் உள்ள முதியோர்கள் தங்களுக்கு தலா 200 வெள்ளி உதவியாக கிடைத்துள்ளது எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிகழ்வில் செனட்டர் கேசவன் தாஸ், கவுன்சிலர் ஜமாலியா, மோகன், சுப்பிரமணி, ஹனாபி ரவி, சாந்தா குமார், காளிதாசன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles