131 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகளை வழங்கியது மலாக்கா டூரியான் துங்கால் ஸ்ரீ மகா மாரியம்மன் கருப்பர் ஆலய நிர்வாகம்!

டூரியான் துங்கால், மார்ச் 5-
மலாக்கா டுரியான் துங்கால் மாச்சாப் தோட்டத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கருப்பர் ஆலயம் ஏற்பாட்டில் மலாக்காவில் உள்ள 21 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.

மேலும் ஒரு ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கும் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.ஆக மொத்தம் 131 மாணவர்களுக்கு 25,000 வெள்ளி செலவில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்வில்
காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி. சாமிநாதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வரும் மார்ச் 11 ஆம் தேதி பள்ளி தொடங்கும் வேளையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கி பேருதவி புரிந்த டூரியான் துங்கால் ஸ்ரீ மகா மாரியம்மன் கருப்பர் ஆலய நிர்வாகத்தை சாமிநாதன் வெகுவாக பாராட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles