
ஜொகூர் பாரு சுங்க துறை நுழைவாய் மற்றும் தூவாஸ் நுழைவாய் கட்டிடத்தில் இருந்து சிங்கபூருக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் நெரிசலுக்கு ஆளாகி உள்ளது குறித்து திரு சந்திர சேகரன் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.பைக் எனப்படும் இரண்டு சக்கர வாகனத்தின் ஊடு கதிர் பதிவில் ஏற்பட்ட கோளாரின் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டதாக ஜொகூர் பாரு சுங்க துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ள விளக்கம் ஏற்று கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,புதிய நிறுவாகம் இந்த எம்.பைக்யை நிறுவகிக்க தொடங்கியதால் இந்த நெரிச்சலுக்கான காரணம் என்றால் ஏன் முன் கூட்டியே அந்த நிறுவனம் அதற்கான ஆயத்த வேலைகளை கையாளவில்லை எனபதோடு பழைய நிறுவனத்தின் குத்தகை முடியும் வரை காத்திருக்க வேண்டிய காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்க வேண்டும் என பொது நல சேவையாளருமான திரு சந்திர சேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

