

சிரம்பான் மார்ச் 6
சிரம்பன் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி. குணசேகரன் தலைமையில் ராயல் சுங்கே உஜோங் கிளப்பில் சிரம்பான் மாவட்ட வாடகை கார் மற்றும் லிமோசின் சங்கம் ஏற்பாட்டில் விருந்து நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தேசிய மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அளவில் விருதுகள் பதக்கம் பெற்ற முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் சா கீ சீன் இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சகோதரர் வீரப்பன்
மாண்புமிகு.பி.குணசேகரன் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
சிரம்பன் மாவட்ட வாடகை கார் மற்றும் லைமோசின் சங்கத்தின் தலைவரான சகோதரர் பாலகிருஷ்ணன் A/L Kodai அவர்கள் PJK விருது பெற்றதற்காக சிறப்பிக்கப்பட்டார்.
விருதுகள் பெற்ற பிரமுகர்கள் மக்கள் நல்வாழ்வுக்காக தங்களது கடமைகளைச் சுமுகமாகச் செய்ய வேண்டும் என்று குணசேகரன் கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிவாஜி புகழ் அசோகன் கலந்து சிறப்பித்தார்.

