
காஜாங், மார்ச் 8-
உலுலங்காட் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன், சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில அளவில் இவரின் சமூக சேவை தொடரும் வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சுரேந்திரனின் சமூக சேவை மற்றும் மைபிபிபி கட்சியின் மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பங்குகள் அளப்பறியவை என்பதால் இவரின் மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டத்தோ எம்.கே. மோகன் கந்தசாமி இந்த பதவியை வழங்கி உள்ளார்.
தம்மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவராக நியமனம் செய்த டத்தோ மோகன் கந்தசாமிக்கு இவ்வேளையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் இப்போது மைபிபிபி மீண்டும் பழைய எழுச்சி பாதைக்கு திரும்பி உள்ளதால் கட்சிக்கும் மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவேன் என்று அவர் சொன்னார்.

