இந்தியாவின் துணை உயர் ஆணையர் சுபாஷினியிடம் மலேசிய தெலுங்கு சமூக வரலாற்று நூல் ஒப்படைப்பு !

கோலாலம்பூர், மார்ச் 8-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சங்கத்தின் துணைத் தலைவர் சத்தியா சுதாகரன், மலேசியாவுக்கான இந்தியாவின் துணை தூதர் திருமதி சுபாஷினி நாராயணனை நேற்று நடைபெற்ற சாலோ இந்தியா நிகழ்வில் சந்தித்து உரையாடினார்.

அப்போது மலேசிய தெலுங்கு சமூக பாரம்பரியத்தின் செழுமையான நாடாவையும் வரலாற்று நூலையும் திருமதி சுபாஷினியிடம் வழங்கினார்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக மலேசிய மண்ணில் வாழ்ந்து வரும் மலேசிய தெலுங்கு சமூகத்தின் வாழ்க்கை நெறி முறைகள், கலை கலாச்சாரங்களை மையமாக வைத் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்வில் மலேசிய – இந்திய இருநாடுகள் இடையே உள்ள பரஸ்பர உறவுகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டோம் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles