இன்னல் தீர அனைவரும் ஒத்துழைப்போம்

ஷா ஆலம் . மார்ச் 8-
பூங்கா ராயா நீண்ட வீடுகளின் பிரச்சனையில் மாநில அரசு பரிவாக நடந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் குடிசைவாசிகளின் இன்னல் தீர அனைவரும் ஒத்துழைப்போம் வாருங்கள் எனச் சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின் இடைவேளையில் நடந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் சமூகப் பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டுவுடன் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம், வீடமைப்பு மற்றும் கலாச்சாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமாட் ஷா மாநில வீட்டுவசதி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கம்பம் பூங்கா ராயா குடிசைகள் விவகாரம் 20 ஆண்டுக்கு மேற்பட்ட விவகாரம். அவர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட மேம்பாட்டாளர் திவாலானதால் ஏற்பட்ட இடையூறு இது என்றார்.
அனைவருக்கும் நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற விவகாரத்தில் குடிசைவாசிகளுக்கு சட்ட உதவி வழங்க இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர ஆர்.சிவராச நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்
.

