சொந்த தொழில் செய்பவர்கள் உதவி நாடி சுங்கை பூலோ தொகுதி அலுவலகத்தை நாடலாம்!

சுங்கை.பூலோ.மார்ச்.10- சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் தேவைப்படுமாயின் சுபாங் ஸ்டார் எவனியுவில் உள்ள தனது அலுவலகத்தை நாடாலாம் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

தெக்கூன் கடன் உதவி பெற வேண்டும் என்றால் 17 பாரங்கள் தேவை. ஆனால் தற்போது 4 பாரங்கள் மட்டும் போதும். சொந்த தொழில் செய்வதற்கான எஸ்.எஸ்.எம் பதிவு, வங்கி கணக்கறிக்கை, அடையாள அட்டை நகல், வியாபாரம் செய்யும் கடையின் படம் ஆகிய 4 ஆவணங்கள் போதுமானது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் இருக்குமாயின் தெக்கூன் மற்றும் அமனா இக்தியார் ராக்யாட்டிலும் கடன் மற்றும் உதவிகள் கிடைக்கும் என்றார் அவர்.

இதனிடையே சுங்கை பூலோவில் 300 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல தேவைப்படும் கல்வி உபகரணங்களை அவர் வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles