

கோலாலம்பூர் மார்ச் 12-
கோலாலம்பூர் வட்டாரத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கி வரும் சன்பெங் தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டில் 12 மாணவர்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
அதே சமயம் பாலர் பள்ளியில் 24 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர் என்று பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பாக்கியலெட்சுமி தேவி தெரிவித்தார்.
தற்போது சன் பெங் தமிழ்ப் பள்ளியில் பாலர் பள்ளி மாணவர்களைச் சேர்ந்து மொத்தம் 104 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் அண்ட்ரூ டேவிட் மற்றும் டத்தோ ரஜினி இன்று பள்ளிக்கு நேரடியாக வருகை புரிந்து பாலர் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
கடந்த வாரம் முதலாம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர் பள்ளி சீருடைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பெங் தமிழ்ப் பள்ளிக்கு பேருதவி புரியும் அண்ட்ரூ டேவிட், டத்தோ ரஜினி உட்பட அனைத்து தரப்பினருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலெட்சுமி தேவி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

