மூன்று பிள்ளைகளுடன் புடுராயா பஸ் நிலையத்தில் பரிதவித்த இந்திய மாதுவின் கண்ணீரை துடைத்த மைபிபிபி!

கோலாலம்பூர் மார்ச் 12-
கடந்த 2 வாரங்களாக Pudu Raya bus station நிலையத்தில் 3 பிள்ளைகளுடன் (11 வயது OKU குழந்தை, 7 வயது & 3 வயது) பரிதவித்த தனித்து வாழும் இந்திய குடும்ப மாதுவுக்கு மைபிபிபி கட்சியின் மூலம் விடிவுகாலம் பிறந்தது.

இவர் மூன்று பிள்ளைகளுடன் புடுராயா பஸ் நிலையத்தில் பரிதவித்த காட்சிகள் பெரும் வேதனையை ஏற்படுத்தின.

கடைசியாக 24 மணிநேரத்திற்குள் கடவுளின் அருளால் இந்திய மாது குடும்பத்திற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடித்தோம் என்று விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தெரிவித்தார்.

மைபிபிபி புக்கிட் பிந்தாங் மகளிர் பிரிவுத் தலைவர் திருமதி நளினி சுரேஷ் ராஜ் ஷா, திருமதி பார்வதி கார்மேகம், திருமதி விக்டோரியா லாரன்ஸ், திருமதி சசிகலா, திரு முத்துசாமி மற்றும் திரு சசி ஆகியோரின் விரைவான நடவடிக்கை யால் இந்த குடும்பத்திற்கு உதவ முடிந்தது.

தங்க நேரத்தில் பிள்ளைகளைஏற்று அடைக்கலம் கொடுத்த ஸ்டெப்பிங் ஸ்டோன் ஹோம் Pastor John அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கிய மெட்ரோஸ்டார் ஹோட்டலின் நிர்வாகி இனிய நண்பர் திரு மெல்வின் மோகன் அவர்களுக்கும் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

மைபிபிபி கட்சியின் மூலம் எங்களால் முடிந்த உதவியை செய்தோம் என்று மைபிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவருமான சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles