
உலகப் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பகாங் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் இன்று 33 அடி உயரத்திற்கு வேல் நிறுவப்பட்டது என்று ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு பெருமை சேர்க்கும் அளவில் இந்த வேல் நிறுவப்பட்டது என்றார் அவர்.

