மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திரத் திருவிழாவில்டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், சுரேஸ் சிங் சிறப்பு வருகை!

கோலாலம்பூர் மார்ச் 12-
மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 24,25 ஆம் தேதிகளில் மிகவும் விமரிசையாக நடைபெறும் வேளையில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சிறப்பு அதிகாரி சுரேஸ் சிங் மற்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்பு வருகை புரிகின்றனர் என்று ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.

மார்ச் 24 ஆம் தேதி முதல் நாளில் இரவு எட்டு மணிக்கு மேல் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலயத்திற்கு வருகை புரிகிறார்.

மறுநாள் மார்ச் 25 ஆம் தேதி காலை பத்து மணிக்கு மாண்புமிகு சுரேஷ் சிங் டியோ சிறப்பு வருகை புரிகிறார்.

இவர்களை தவிர்த்து சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லியோங் இயூ மான் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles