புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த2,500 பேருக்கு உதவிப் பொருட்கள்!

கோலாலம்பூர் மார்ச் 22-
நோன்பு பெருநாளை முன்னிட்டு 2,500 பேருக்கு உதவிப் பொருட்களை ஸ்ரீரம்பாய் அல் ஃபரிடியா திருக் குர்ஆன் மனனப் பள்ளி இன்று வழங்கி பேருதவி புரிந்தது.

30ஆவது ஆண்டாக இப்பொருட்கள் வழங்கப்படுகிறது என்று அதன் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி சொன்னார்.

நோன்பு பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சிறிய எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 2,500 பேரை அது எட்டியுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது

தேசிய போலீஸ்படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அய்யூப் கான் மைடின் பிச்சை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

மேலும் தேசிய போலீஸ்படை, நெஸ்லே, பிரெஸ்மா, அலிமாஜூ உணவகக் குழுமம், மியாக் உட்பட பல நல்லுள்ளங்களில் ஆதரவில் இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles