சொஸ்மா கைதிகளை விடுவிக்க கோரி
அக்டோபர் 30 ஆம் தேதி
சுங்கை பூலோ சிறைச்சாலை முன் அமைதி மறியல்

ஒருவரை விசாரணையின்றி தடுத்து வைக்கும் சொஸ்மா எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி சுங்கை பூலோ சிறைச்சாலை முன் அமைதி மறியல் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியா தமிழர் குரல் ஏற்பாட்டில் நடக்கும் இந்த அமைதிப் பேரணியில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் தீரவாதிகள் அல்ல. ஆகவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யக்கோரி மலேசிய தமிழர் குரல் இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

மலேசியா தமிழர் குரல் முன்னாள் தலைவர் டேவிட் மார்ஷல் தலைமையில் அக்டோபர் 30ஆம் தேதி காலை 11.30 மணிக்கு இந்த அமைதி பேரணி நடைபெறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles