சமயத்தை இழிவு படுத்துவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்து

எந்த ஒரு சமயத்தையும் இழிவு படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் இந்து சமயத்தை தொடர்ந்து இழிவு படுத்தும் ஸம்ரி வினோத் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இவருக்கும் எதிராக மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மைபிபிபி கட்சியில் அனைத்து இனத்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

நாங்கள் இனத்தையும் சமயங்களையும் மதிக்கிறோம். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசுவதில்லை.

ஆகவே எந்த ஒரு சமயத்தையும் யார் இழிவுபடுத்தினாலும் அவர்கள் மீது சட்டம் பாய வேண்டும். இதுதான் எங்களின் நிலைப்பாடு என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles