ஆயுதமேந்தி வெ.300,000 கொள்ளையிட்டதாக இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

செய்தி: முத்தமிழ் மன்னன்.

மூன்று வாரங்களுக்கு முன் ஆடவர் ஒருவரிடம் 300,000 வெள்ளியைக் கொள்ளையிட்டதாக அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை இரு பெண்கள் மறுத்து விசாரணைக் கோரினர்.
கடந்த மார்ச் 15ஆம் தேதி மதியம் 1.00 மணியளவில் அம்பாங், தாமான் மெலாவதி சாலையோரம் Hardev Singh Gill, (வயது 27) என்பவரிடம் தலைமறைவாக இருந்து வரும் இதர ஐவருடன் சேர்ந்து ஆயுதமேந்தி கொள்ளையிட்டதாக Zarina Sinin, 54, Safiah Ibrahim, 59 ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles